அப்போ செய்யல.. இப்போ இத செஞ்சு 'வாரிசு'க்கு ப்ரோமோஷன் தேடும் தளபதி? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு பின், தன்னுடைய ரசிகர்களை மாவட்ட ரீதியாக, அவ்வப்போது சந்தித்து ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து விவாதித்து வருகிறார் தளபதி விஜய்.
அந்த வகையில், சமீபத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்த விஜய், இரண்டாம் கட்டமாக நேற்று செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர், ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னதாக, விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
மிகவும் ஸ்டைலிஷான ‘வாரிசு’ பட லுக்கில் வந்திறங்கிய விஜய்… சுமார் மூன்று மணிநேரம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பிற்கு விஜய் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விஜய் ஒரு ரசிகரை கையில் ஏந்தியபடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அதிகம் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், மற்றொரு தரப்பில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
விஜய் படத்தின் ஷூட்டிங் சென்னை போன்ற இடங்களில் எடுக்கப்பட்டால், விஜயை சந்திக்க மாற்று திறனாளி ரசிகர்கள் முதல் குழந்தை ரசிகர்கள் வரை ஷூட்டிங் ஸ்பாட் கேட்டில் கூடி விடுவது உண்டு. அப்படி பட்ட நேரத்தில் கூட, ரசிகர்களுக்காக காரை விட்டு கீழே இறங்காமல், ரசிகர்களை பார்த்து கை அசைக்காமல் செல்லும் விஜய், தற்போது புரோமோஷனுக்காக இப்படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவதாக கூறி விளாசி வருகிறார்கள்.