10 நாள் கூட ஆகல.. ஹன்சிகா வீட்டில் அனல் பறக்கும் விவாகரத்து விவகாரம்.. குழப்பத்தில் குடும்பத்தினர்
தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.
ஷக்கலக்கா பூம் பூம் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போல கொழுமொழுக் பெண்ணாக இருந்த இவரை “சின்ன குஷ்பு” “குட்டி குஷ்பூ” என கோலிவுட் வட்டாரம் செல்லமாக அழைத்து வந்தது. இந்நிலையில், தற்போது, செம பிட்டாக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் இவரது 50வது படமான மஹா வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் கைவசம் தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 3 படங்கள் உள்ளன. ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சொஹைல் கதூரியாவுக்கு, ரிங்கி என்ற பெண்ணுடன் 2016ம் ஆண்டு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. சொஹைலின் முன்னாள் மனைவி ரிங்கி ஹன்சிகாவின் தோழி என்று சொல்லப்படுகிறது. ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார் சொஹைல். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தான் ஹன்சிகாவுக்கும், சொஹைலுக்கும் இடையே பழக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் பாரம்பரிய முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், இவருடைய திருமணத்தில் அம்மா மற்றும் சகோதரருடன் மட்டுமே புகைப்படங்களை எடுத்துக் கொண்ட ஹன்சிகா, அவருடைய அண்ணனின் மனைவி முஸ்கான் நான்சியுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. ஏன் அவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவி முஸ்கான் நான்சியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் மோத்வானிக்கும், முஸ்கான் நான்சிக்கும், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஹன்சிகாவின் திருமணத்தையும் முஸ்கான் நான்சி புறக்கணித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இருவரின் விவாகரத்து குறித்து வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.