'தனிமை மனவேதனை தந்தாலும் துணிவும் தைரியமும் வருகிறது' : ரக்சிதா Open Talk !

Rachitha mahalakshmi opens about her personal and serial life

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Rachitha mahalakshmi opens about her personal and serial life

தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

Rachitha mahalakshmi opens about her personal and serial life

தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Rachitha mahalakshmi opens about her personal and serial life

இந்நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் தாய் கேரக்டரில் நடித்து வருவகிறார்.

Rachitha mahalakshmi opens about her personal and serial life

இதனை பற்றி பேட்டி ஒன்றில் ரக்சிதா பேசியபோது, இந்த கேரக்டர் தனது சொந்த வாழ்க்கையோடு சில சமயங்களில் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளதால், கணவரை பிரிந்துள்ளதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Rachitha mahalakshmi opens about her personal and serial life

மேலும் தனிமை தனக்கு மன வேதனையை தந்தாலும் இந்த கேரக்டரில் நடிக்கும் போது தனிமையை சந்திக்கும் துணிவும் தைரியமும் தனக்கும் வருவதாக ரக்சிதா கூறியுள்ளார்.

Share this post