சாய் பல்லவி பிறந்த நாளுக்கு கமலின் சர்ப்ரைஸ் கிப்ட்.. வைரலாகும் பதிவு - இது செம்ம ட்விஸ்ட்'u !

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலம் ஆனவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தை தொடர்ந்து, இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மலையாள மொழி திரைப்படமான ப்ரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

இதனைத் தொடர்ந்து, தமிழில், தியா, மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு மொழியில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

டோலிவுட்டில் பிரபலம் ஆன இவர், ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் கடைசியாக நடித்தார். பின்னர், தெலுங்கில் ராணா டகுபதி ஜோடியாக இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளது.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

வேறு எந்த திரைப்படங்களிலும் கமிட் ஆகாத நிலையில், இவர் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நல்ல கதை மற்றும் கதாபாத்திரத்திற்காக வெய்ட் செய்வதாக அவர் தெரிவித்தார்.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

இன்று பிறந்தநாள் காணும் நடிகை சாய் பல்லவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

அதாவது, ஏற்கனவே அறிவித்தது போல கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK21 படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

இன்று மாலை 6 மணிக்கு SK 21 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இதுதான் அந்த அறிவிப்பு என சொல்லப்படுகிறது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

Sai pallavi to onboard in sk21 rumours spreading in social media

Share this post