முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா ! வைரலாகும் புகைப்படம் !

Priyanka chopra shares her baby girl photo on social media

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து பிரியங்கா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Priyanka chopra shares her baby girl photo on social media

2018ம் ஆண்டு பிரபல பாடகரான நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தன்னை விட சிறிய வயது கொண்டவர் நிக் ஜோனஸ் என்றாலும் நீண்ட நாள் காதலில் இருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

Priyanka chopra shares her baby girl photo on social media

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத் தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்தன.

Priyanka chopra shares her baby girl photo on social media

ஆனால் அவர்கள் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தனர். ஐசியூவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ள குழந்தை புகைப்படத்தை, பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், குழந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

Priyanka chopra shares her baby girl photo on social media

அவர் பதிவில் : “கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட ரோலர் கோஸ்டர் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த எங்களது குழந்தை தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்துவமானது. எங்களுக்கு கடந்த சில மாதங்கள் சவால் நிறைந்ததாக இருந்தது. அம்மா, அப்பாவாக எங்களது புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தற்போது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post