Viral Video : அட அந்த புஷ்பா குழந்தைங்கள கூட விட்டு வைக்கல.. வைரலாகும் பிறந்த குழந்தையின் வீடியோ

Pushpa mannerism done by baby child viral video getting shared on social media

கடந்த 2021 டிசம்பர் மாதம் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி செம ஹிட் ஆகிய திரைப்படம் புஷ்பா. இப்படம் வருவதற்கு முன்பே, இதில் இடம்பெற்ற, ஹே சாமி, ஊ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது.

அதிலும், அல்லு அர்ஜுன் உடைய வித்தியாசமான மேனரிசம், சமந்தாவின் ஐட்டம் சாங் என பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அதை பின்பற்றி வீடியோ பதிவிடுவது ரீல்ஸ் வீடியோ செய்வது என இருந்து வந்தனர். அதிலும், அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் மேனரிசம் உலகளவில்ட்ரெண்ட் ஆனது.

Pushpa mannerism done by baby child viral video getting shared on social media

கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் எவரையும் இந்த விஷயங்கள் விட்டுவைக்கவில்லை.

Pushpa mannerism done by baby child viral video getting shared on social media

இந்நிலையில், சமீபத்தில் பச்சிளங் குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிறந்த சில மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு சிறிய புன்னகையுடன், தனது தாடையைத் தடவுகிறது. அது பார்ப்பதற்கு, அப்படியே அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் தாடியைக் கோதுவது போலவே உள்ளது. மேலும், அந்த வீடியோவில், புஷ்பா படத்தின் வசனமும் வைத்து எடிட் செய்துள்ளனர். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this post