தொகுப்பாளினி டிடிக்கு மறுமணம்..? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த அவரது அக்கா பிரியதர்ஷினி..!
ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான். விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், பா. பாண்டி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற திரைப்படங்களில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான Coffee With காதல் படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் மற்றும் வீடியோஸ் பதிவிட்டு வருகிறார். பெரிய அவார்ட் வழங்கும் நிகழ்ச்சி அல்லது முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சக்ஸஸ் பார்ட்டி போன்றவற்றில் இவர் தொகுப்பாளினியாக இருப்பதும் வழக்கம்.
விவாகரத்துக்கு பின்னர், டிடி தனது பெற்றோருடன் வாழ்ந்து வரும் நிலையில், டிடி-க்கு இரண்டாவது திருமணம் செய்ய, அவருடைய வீட்டில் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்.. தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வலைத்தளங்களில் தகவல் வைரல் ஆனது.
இந்த தகவல் வதந்தியா அல்லது உண்மையா என பலரும் குழம்பி வந்த நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், இது குறித்து டிடியின் சகோதரியும், நடிகையுமான பிரியதர்ஷினி அவர்களிடம் கேட்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், எதற்காக இப்படி தகவல் பரவுகிறது என்று தெரியவில்லை. மேலும், இதுகுறித்து டிடியிடம் கேட்டால் எனக்கே யார் என்று தெரியவில்லையே என கூலாக கூறியுள்ளாராம். இதுபோன்ற வதந்திகள் வருவது வழக்கம், பழகிவிட்டது என கூறி இருக்கிறார். எனவே இது வெறும் வதந்தி தகவல் மட்டுமே என கூறி டிடியின் இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.