நயன்தாராவை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலம்.. நயன் சொன்ன உண்மை.. ரசிகர்கள் ஷாக்..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட்.
தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்து வந்த தர்மசங்கடமான விஷயம் குறித்து பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரையுலகில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதும், அட்ஜஸ்மென்ட் பண்ண சொல்லி கேட்பதும் அதிகம் இருப்பதாக சில பிரபல நடிகைகளே வெளிப்படையாக கூறி வருகின்றனர். சிலர் அப்படி செய்தவர்களின் பெயர்களை வெளியிட்டு “Me Too” புகாரும் மேற்கொண்டனர். அதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பட்டியல் பெரிது.
இப்படி இருக்க, அண்மை பேட்டி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய நயன்தாரா, “என் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் தருகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று என்னிடம் ஒருவர் கூறினார். ஆனால் நான் முடியாது என்று தைரியமாக கூறிவிட்டேன். என் திறமைக்காக மட்டும் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நம்புகிறேன்” என்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவையே படுக்கைக்கு அழைத்த அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். நயன்தாரா அந்த நபரின் பெயரை வெளியிட வேண்டும். தான் செய்த செயலுக்காக அந்த நபர் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் தான் இந்த கொடுமை நடக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.