‘கில்லி’ முத்துப்பாண்டியின் காதல் தோல்வி.. ஃபீல் பண்ணிய பிரகாஷ் ராஜ்.. த்ரிஷாவின் பதில் வைரல் !
2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தனலட்சுமி கேரக்டரில் திரிஷா, முத்துப் பாண்டி எனும் வில்லன் கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் இதற்கான மவுசு மக்களிடையே குறையவில்லை.
தற்போது டிவியில் ஒளிபரப்பானாலும் டிஆர்பி எகிறும் அளவுக்கு இப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜின் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரது ‘ஹாய் செல்லம்’ வசனம் இன்றளவும் பேமஸ். இப்படத்தில் திரிஷா மீதான முத்துப்பாண்டியின் காதல் தோல்வியில் முடிந்துவிடும்.
அதனை வைத்து மீம் கிரியேட்டர்கள் செய்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் தனுஷின் திருச்சிற்றம்பலம், படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவியின் புகைப்படத்தை பார்த்து ஃபீல் பண்ணும்படியான ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.
அந்த காட்சியை எடிட் செய்து அவர் திரிஷா போட்டோவை கையில் வைத்திருப்பது போல மாற்றி பின்னணியில் தேன்மொழி என்கிற காதல் தோல்வி பாடலை ஒலிக்கவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நடிகர் பிரகாஷ் ராஜ் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்த வீடியோவை யார் செய்திருந்தாலும் சரி.. நீங்கள் என் நாளை முழுமையாக்கிவிட்டீர்கள்.
உங்கள் அன்புக்கு நன்றி, செல்லம்ஸ் ஐ லவ் யூ’ என பதிவிட்டு திரிஷாவையும் டேக் செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த நடிகை திரிஷா, சிரிக்கும் எமோஜிகளுடன் பிரகாஷ் ராஜுக்கு கியூட்டாக ரிப்ளை செய்துள்ளார். திரிஷா - பிரகாஷ் ராஜ் இடையேயான இந்த உரையாடல் டுவிட்டரில் வைரல் ஆகி வருகிறது.
😂😂😂 @prakashraaj https://t.co/Et7LWsbjIn
— Kundavai (@trishtrashers) September 18, 2022