விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு மாறும் பிரபல VJ.. வெளியான காரணம் !

Popular vj is going to zee tamil from star vijay

சின்னத்திரையில் சீரியல் தொடர்கள், பிரபல நிகழ்ச்சிகள் என போட்டி போட்டு வரும் சேனல்களில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான் டாப். இதனால், நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள் என அனைவரும் இது இல்லனா அது என மாறி மாறி வருகின்றனர்.

Popular vj is going to zee tamil from star vijay

அந்த சேனல் போனால் இங்கே வாய்ப்பு இல்லை என்ற பாலிசி 2 சேனல்களும் மறைமுகமாக maintain செய்து வருவதாக நிறைய பேர் வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளனர்.

Popular vj is going to zee tamil from star vijay

அந்த வகையில், பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா, ஜீ தமிழில் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார். திடீரென, விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தவர் விஜய் டிவியில் செட்டில் ஆகி விட்டார்.

Popular vj is going to zee tamil from star vijay

பின்னர், காதலே காதலே, பரிவட்டம், நம்ம வீடு கல்யாணம், சிங்கப்பெண்ணே, Mr. and Mrs சின்னத்திரை என பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular vj is going to zee tamil from star vijay

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்கள். இந்நிலையில், சூப்பர் மாம் நிகழ்ச்சியின் புதிய சீசன் துவங்கவுள்ளது. இதற்காக தற்போது மீண்டும் ஜீ தமிழில் தனது மகளுடன் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம் தொகுப்பாளினி அர்ச்சனா.

Popular vj is going to zee tamil from star vijay

விரைவில் இந்நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோ வீடியோவாக வெளிவரும் என கூறப்படுகிறது. இதனால் ஏன் இந்த மாற்றம், விஜய் டிவி செட் ஆகவில்லையா என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Popular vj is going to zee tamil from star vijay

Share this post