படித்த பள்ளியில் முக்கிய நபருடன் போட்டோ எடுத்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

Nayanthara school and young photo with hm getting viral on social media

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்திருந்தார்.

Nayanthara school and young photo with hm getting viral on social media

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara school and young photo with hm getting viral on social media

சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம். அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

Nayanthara school and young photo with hm getting viral on social media

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.

Nayanthara school and young photo with hm getting viral on social media

இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தற்போது, நயன்தாரா படித்த பள்ளிக்கூடம் மற்றும் அங்கு அவர் தனக்கு பிடித்த முக்கிய நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Nayanthara school and young photo with hm getting viral on social media

நயன்தாரா சொந்த ஊரான கேரளாவில் திருவல்லா, அங்கிருக்கும் O.E.M பப்ளிக் பள்ளியில் தான் நயன்தாரா படித்துள்ளார். நயன்தாரா தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Nayanthara school and young photo with hm getting viral on social media

Share this post