பாரதி கண்ணம்மாவில் பிரபல சீரியலின் முக்கிய ஹீரோ.. வைரலாகும் வீடியோ !

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம்.
பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, ஈரமான ரோஜாவே 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பல தொடர்கள் விஜய் டிவியில் டிஆர்பியில் இடம் பிடித்துவிடும்.
அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் வந்து விடும். இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக வரவேற்பு பெற்றாலும், கண்ணம்மா கையில் பை வைத்துக் கொண்டு நடந்த காட்சியை நெட்டிசன்களும், மீம் க்ரியேட்டர்களும் சும்மா விடவில்லை. அந்த ஒரு காட்சி மூலம் ஓஹோ என ஹிட்டடித்தது. அதில் இருந்து தொடருக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
ஆனால், ஒரே விஷயத்தை போட்டு இழுக்க மக்களுக்கு ஜவ்வு போல ஆகிவிட்டது. தற்போது, புது கதாபாத்திரம் ஒன்று தொடரில் அறிமுகமாகியுள்ளது. ஒரு எபிசோடில் நம்ம வீட்டுப் பொண்ணு தொடர் சுஜித் சிறப்பு வேடத்தில் நடித்தார். தற்போது, பிரபல சீரியலின் முக்கிய ஹீரோ இதில் அறிமுகமாகியுள்ளார்.
இப்போது வேலைக்காரன் தொடரில் நடித்துவந்த சபரி பாரதி கண்ணம்மாவில் என்ட்ரீ கொடுத்துள்ளார். வெண்பா ஜோடியாக நடிக்க வந்துள்ளார்.
இவரது பில்டப் பார்த்தால், இவர் ஒரு கதாபாத்திரமாக சீரியலில் இருந்து விடுவார் என தெரிகிறது. இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.