மேடையில் கேகே வின் கடைசி நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ.. அவசரமாக வெளியேறிய கேகே !
பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், பிரபலமாக கேகே என அழைக்கப்படுபவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என அனைத்து மொழிகளிலும் நிறைய பிரபல பாடல்களை பாடியவர்.
இவர் செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபர்ப்பாம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததை அடுத்து கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
53 வயதான கிருஷ்ணகுமார் குன்னத், தமிழில் விஜய், அஜித், பிரபு தேவா உள்ளிட்டோரின் 90ஸ் ஹிட் பாடல்களை பாடியவர்.
ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். 3 தலைமுறை ரசிகர்களை ஈர்த்து வந்தவர். மேடையில் இருந்து அவர் அவசரமாக கிளம்பும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
The very moment when #KK felt uneasy and was taken to CMRI hospital, #Kolkata. He was declared brought dead.
— Madhuri Rao (@madhuriadnal) June 1, 2022
He performed the show and ended it.#RIP #KK Not KK pic.twitter.com/WFOHKdCqFn