இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பேமஸ் !
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலருடைய குழந்தை பருவ புகைப்படங்கள் அல்லது சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அண்மையில், நடிகர் விஜய், தனுஷ், அஜித் உள்ளிட்டோரின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்டு வந்தது.
அந்த வரிசையில், தற்போது பிரபல முன்னணி நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தலையில் மல்லிகை பூவுடன் அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்த இந்த குழந்தை தற்போது கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் வேறு யாருமில்லை, நடிகை சமந்தா தான். குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Share this post