Pisasu 2 Teaser : 'குழந்தைகள் பார்க்க வேண்டாம்'... கண்ண மூடி பாத்தா கூட பயமாத்தான் இருக்கு.. திகில் கிளப்பும் பிசாசு 2 டீசர் வீடியோ!

இயக்குனர் மிஸ்கின் அவர்கள் திகில் திரைப்படங்களும், ஆழமான வலிகளையும் திரைக்கதையையும் எடுத்துரைக்கும் அளவிற்கு திரைப்படம் உருவாக்குவது அவரது வழக்கம். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமானார்.
அஞ்சாதே, முகமூடி, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சந்தோஷ், பூர்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் செம திகில் கூட்டி வைரல் ஆன நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. திகில் நிறைந்து வெளியாகியுள்ள இத்திரைப்படம் படத்தின் ஆர்வத்தினை கூட்டியுள்ளது.
Share this post