பாண்டியன் ஸ்டோர் தனத்திற்கு கவர்னர் கையால் கிடைத்த கெளரவம்.. வைரலாகும் புகைப்படம் !

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சீரியல் தொடர்களிலும் பிரபலமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. சிறு 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 50திற்கும் மேற்பட்ட சீரியல் தொடர்கள் என தென்னிந்திய வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனக்கென்ற பெயர் பெற்றவர்.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டிஆர்பியில் முன்னிலை வகித்து வரும் இத்தொடர், மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பாகி வருகிறது.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

தெலுங்கில் வடிநம்மா, கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

இந்த தொடரில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். தெலுங்கிலும் இவர் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் பயணித்து வரும் சுஜிதாவிற்கு விருது கிடைத்துள்ளது.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

சமீபத்தில் மாண்புமிகு மகளிருக்காக என்ற விருது நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சுஜிதாவிற்கு வழங்கியிருக்கிறார்.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

மேலும், சுஜிதா விருது வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Pandian stores sujitha dhanush getting prestigious award from governor

Share this post