சனிக்கிழமைனாலே பார்ட்டி தான்.. வீடியோ பதிவுடன் SK அறிவித்த 'Private Party' .. நாளை வெளியாகவிருக்கும் 3வது சிங்கிள்..

Sivakarthikeyan dons 3rd single private party song going to be released tomorrow

தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான டாக்டர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அர்ச்சனா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Sivakarthikeyan dons 3rd single private party song going to be released tomorrow

அதனைத் தொடர்ந்து, லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, ஆர் ஜே விஜய், பாலா சரவணன், ராஜு, ஷாரிக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டான்.

Sivakarthikeyan dons 3rd single private party song going to be released tomorrow

டான் படத்தை விநியோகிக்கும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவி கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் வருகிற மே 13ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan dons 3rd single private party song going to be released tomorrow

ஏற்கனவே இப்படத்தில் இருந்து ஜலபுல ஜங் மற்றும் பே ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் டான் படத்திலிருந்து ‘பிரைவேட் பார்ட்டி’(PRIVATE PARTY) என்னும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan dons 3rd single private party song going to be released tomorrow

Share this post