'கமல் நெனச்சா அது நடக்கும்'.. மீண்டும் இணைந்த பஞ்சதந்திரம் கூட்டணி - கவனம் ஈர்க்கும் வீடியோ !

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யுகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, தேவயானி, நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்திற்கு கிரேசி மோகன் டயலாக் எழுதியிருந்தார்.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

2002ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், சீன்கள் என எல்லாமே ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது.

நண்பர்கள் கூட்டணி திருமணத்திற்கு பிறகு அடிக்கும் லூட்டி பற்றி செமையாக கதை வடிவமைச்சிருப்பார்.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

தற்போது, கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். 1986ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம்.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் அப்படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான அப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து, கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இப்படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ட்ரைலரில் சண்டை காட்சிகள், கோபம், சூர்யாவின் சிறப்பு தோற்றம் என பலதும் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ட்ரைலர் மூலம் கதையை பற்றி எந்த மாதிரியான ஹின்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

Panchathanthiram friends joins for vikram movie shooting video getting viral

விக்ரம் திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரமே உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், பஞ்சதந்திரம் பாணியில் விக்ரம் ப்ரோமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Share this post