ஜெயிலர் பட ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்... தமிழக அரசு போட்ட ரூல்ஸ்.. அட கடவுளே..!
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் என வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர்.
அதிலும் தமன்னா ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே வருகிறது. ஆனால், தற்போது, படத்தின் ரிலீஸில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்பட ரிலீஸ் அன்று, தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பில்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் அன்று அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்படுவது வழக்கம்.
அப்படி கடந்த ஜனவரி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் அன்று, இருதரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது, அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் உள்ளிட்டவைகளால், இனி அதிகாலை காட்சிகள் திரையிடப்படக்கூடாது என அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து கடந்த 7 மாதங்களாக எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. இதே ரூல்ஸ் ஜெயிலர் படத்திற்கும் பின்பற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.