பிரபல மூன்றேழுத்து நடிகர் படத்தில் அனிகா.. அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா..?
குழந்தை நட்சத்திரமாக சோட்டா மும்பை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, Kadha Thudarunnu, 4 ப்ரெண்ட்ஸ், ரேஸ் போன்ற பல மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்னர், என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அஜித், திரிஷா மகளாக நடித்தார். அதன் பின்னர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா மகளாக நடித்தார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், மியூசிக் ஆல்பம் விடியோக்கள், வெப் சீரீஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அனிகா, தற்போது, ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது, இவரது அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இவர் தனுஷின் 50வது படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அதற்குள் தனுஷ் படமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இந்த படத்தில் தனுஷின் சகோதரியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.