கோபி முன் பாக்யாவிடம் 'ஐ லவ் யூ' சொன்ன பழனிசாமி.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்.. Viral Video..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பாக்கியா கோபியை விவாகரத்து செய்து தனது குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து வருகிறார். பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் Spoken English கிளாசில் நண்பர்களாக பழகி வருகின்றனர். தற்போது பாக்யா கல்லூரிக்கு படிக்க போகிறார் என்கிற விஷயம் கேட்டு கோபி ஷாக் ஆகி, அதை பற்றி பேச இன்ஸ்டிடியூட்டுக்கு கோபி செல்கிறார்.
அப்போது பாக்யாவிடம் பழனிச்சாமி ஐ லவ் யூ சொன்னதை கேட்டு ஷாக்கில் கோபி நெஞ்சுவலியே வந்துவிடுகிறது. இது இந்த வார ப்ரோமோ வீடியோவாக வந்துள்ளது.