கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி!
மிருகம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இதனைத் தொடர்ந்து ஈரம், அரவான் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமாரான அளவிற்கு படங்கள் இருந்தாலும் இவருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகிறது.
நிக்கி கல்ராணி, ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களின் மூலம் நல்ல பிரபலம் ஆனார்.
மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த போது நிக்கி கல்ராணி உடன் காதல் ஆனதால், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில், மார்ச் 24ம் தேதி நடிகை நிக்கிக்கும் ஆதிக்கும் சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் நெருங்கிய திரையுலக நண்பர்கள் கலந்து கொள்ள சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்தனர்.
கடந்த மே 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொலிந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னையில் நடத்தப்பட்டது. ஆதியும், நிக்கி கல்ராணியும் திருமணத்திற்கு பின் பாரிஸுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஈபிள் டவர் முன் இருவரும் ஜோடியாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணத்திற்கு பிறகு, நிக்கியின் நடிப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி குறித்து ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
அது என்னவென்றால், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளார் என்பது தான். விரைவில் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி பெற்றோர் ஆக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
தற்போது, இதுகுறித்து நடிகை நிக்கி கல்ராணி விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் பெரிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அப்படி ஒரு விஷயம் நடந்தால், நானே முதலில் சொல்வேன் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.