நெஞ்சை பதறவைக்கும்.. நயன்தாராவின் 'கனெக்ட்' திகில் டீசர்.. இதுல 95 நிமிஷம் பிரேக் இல்லாத படமாமே!

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.
நேற்று, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். மேலும், திருமணம் ஆகி குழந்தை பெற்று இவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் கனெக்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட். கனெக்ட் படத்தையும் அவர் அதே பாணியில் இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
நேற்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கனெக்ட்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.