'கோமாளி படத்துல தன்னை கேலி செய்த சீன் பத்தி ரஜினி சார் கேட்டார்'.. பிரதீப்பின் வைரலாகும் பேட்டி
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், யார் என்பதை தெரிந்துகொள்ள இவரின் சமூக வலைதளங்களை நெட்டிசன்கள் நோட்டம் விட தொடங்கி, இவர் போட்ட பழைய ட்வீட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகின்றன.
தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படம், சச்சின், தோனி என ரசிகர்கள் பேவரைட் ஆனா பல பிரபலங்களை இவர் பழைய போஸ்ட்களில் ட்ரோல் செய்திருப்பதை ஸ்க்ரீன்ஷாட் செய்து அதனை நெட்டிசன்கள் வைரல் செய்து வந்தனர். இதனால், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தை முழுவதுமாக செயலிழக்க செய்யவே, அதற்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். மேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
அதாவது, தற்போது பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி என்றும், மேலும் அதில் சில பதிவுகள் உண்மையானவை தான். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு பிரதீப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்போது, கோமாளி படத்தில் ரஜினியை கேலி செய்ததது குறித்து ரஜினியே கேட்டதாக கூறி உள்ளார். கோமாளி படத்தின் ஒரு காட்சியில் கோமாவில் இருந்து ஜெயம் ரவி எழும் போது இது எந்த வருடம் என்று யோகி பாபுவிடம் கேட்பார் அதற்கு யோகி யோகி ‘இது 2016 என்று கூறுவார். அதன் பின்னர் டிவியில் ரஜினி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று பேசும் வீடியோவை யோகி பாபு போட்டு காண்பிப்பார்.
அதை பார்த்து ஜெயம் ரவி ‘இது 96, யார ஏமாத்துறீங்க என்று சொல்வார்” இந்த காட்சியை ட்ரைலரில் பார்த்த போதே ரஜினி ரசிகர்கள் பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் ஆனால், வரமாட்றார் என்று பலர் அந்த சமயத்தில் கேலி செய்து வந்தனர். அதனால் ரஜினியை கேலி செய்யும் சீன் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேசனுடன் சேர்ந்து பிரதீப் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த சீனை படத்தில் இருந்து நீக்கியும் இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினியை சந்தித்த போது அவர் சொன்ன விஷயம் குறித்து பேசி இருக்கிறார் பிரதீப்.
அதில் ‘என்னை அவர் பொன்னாடை எல்லாம் போற்றி அருமையாக வரவேற்றார் மேலும் நிறைய படங்களை பற்றி பேசி இருந்தார். அவர் பல விஷயங்களை மிகத் துல்லியமாக அவர் இருக்கிறார். அதுவே எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. போன படத்தில் நம்மளை கலாய்ச்சிங்க இல்ல என்று கூறி எல்லாம் Fun தான் என்று சொன்னார். அவருக்கு எது குறிக்கோளுடன் செய்கிறோம். எது funகாக செய்கிறோம் என்பது தெரியும். அந்த காட்சியை நாங்கள் funகாக தான வைத்தோம். அந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே ஐசரி கணேசன் சாரிடம் இது குறித்து ரஜினி சார் பேசியபோது படம் வேறு அரசியல் வேறு என்று சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்’ என்று கூறியுள்ளார் பிரதீப்.
Fun fun .. I know
— கரிகாலன் ★ (@senthan_msd) November 17, 2022
Thalaivaaa 🛐❤️#Jailer @rajinikanth pic.twitter.com/zJEXxhDJEi