'கர்ணன்'ன்னு தான சொன்னீங்க.. ஆனா இதுல பாத்தா..? 'கர்ணன்' பட டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.
காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது. நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வறுத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர்.
இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட மகாவீர் கர்ணன் திரைப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், திடீரென அப்படத்தின் போஸ்டர் மற்றும் மினி டீசர் வெளியாகியுள்ளது.
சூர்யபுத்ர கர்ணா என பெயர் மாற்றம் செய்யபட்டு வெளியான டீசர் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. கர்ணன் படத்தின் புதிய டீசரை பார்த்து ரசிகர்கள் விக்ரம் என்ன பீஷ்மர் லுக்கில் இருக்கிறாரே என கலாய்த்து வருகின்றனர்.
பிரபாஸை வைத்து 600 கோடியில் உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படமே அனிமேஷன் சரியில்லாமல் அடி வாங்கியது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கர்ணன் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் கோணல் முற்றிலும் கோணலாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.