ஜெயிலர் ரிலீசுக்கு பிறகு.. ரீ-ஷூட் செய்து லியோவில் வம்படியாக லோகேஷ் செய்த அதிரடி மாற்றங்கள்..! ஏன் இப்படி..?
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கு பிறகு தலைவர்171 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்த பிறகு, லியோ படத்தின் கதையிலும் திரை கதையிலும் வம்படியாக சில மாற்றங்களை செய்து படத்தை லோகேஷ் ரீ-சூட் செய்தார் என சொல்லப்படுகிறது.
கிராஃபிக்ஸ் பணிகளில் மெனக்கெட்டு வேலை செய்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு நாளைக்கு வெறும் 3 மணி நேரம்தான் உறங்குகிறார் என பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.