'வாவ்.. சூப்பர்.. செம Grand.. Extraordinary Wikki..' விக்னேஷ் சிவனுக்கு மெசேஜ் அனுப்பிய நயன்..

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. திருமணம் முடிந்த கையோடு கோவில், நயன்தாரா சொந்த ஊரான கேரளா, தேனிலவு சென்றது என அனைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

திருமணத்திற்கு பிறகு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனோ அஜித்தின் 62 படத்தை இயக்க விறுவிறுப்பாக ரெடி செய்து வருகிறார். இதற்கிடையே, ஜாக்பாட் ஆப்பராக விக்னேஷ் சிவனுக்கு, சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தொடக்க விழாவில் ஷூட்டிங் காரணமாக பங்கேற்காத நயன்தாரா, லைவ்வில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மெசேஜ் செய்து இருந்தார் மேலும் என்ன சொன்னார் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் பேசியுள்ளார்.

Nayanthara sends message to vignesh shivan about chess olympiad

அதில், லைவ்வில் நிகழ்ச்சியை பார்த்த நயன்தாரா மெசேஜ் அனுப்பிய படியே இருந்ததாகவும், வாவ்..செம Grand, Extraordinary Wikky கலக்கிட்டனு பாராட்டியதாக கூறினார். நயன்தாராவே விக்னேஷ் சிவனை வாழ்த்தியதால் விக்னேஷ் சிவன் அளவற்ற சந்தோஷத்தில் அப்பொழுது இருந்தாராம்.

Share this post