பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் Brand Ambassador ஆக நயன்தாரா நியமனம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்திருந்தார்.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் நிறைய சங்கடங்கள், தோல்விகள் இதனால் வந்த அவப்பெயர்கள் என ஏராளம். அத்தனையும் சகித்து வந்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில், மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான், காட்ஃபாதர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தற்போது, இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக (Brand Ambassador) நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஃபிபோலா(Fipola)-வின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிறுவனத்துக்காக அவர் நடித்த விளம்பரங்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

தென் மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இந்த ஃபிபோலா நிறுவனத்தில் பிராண்ட் தூதுவரானதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நயன்தாரா, இந்த பிராண்ட் உடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார். நடிகை நயன்தாரா, மிகப்பெரிய அசைவ விரும்பி, குறிப்பாக கடல் உணவுகள் அவரும் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனத்துடன் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

Nayanthara appointed as brand ambassador of popular non veg selling online platform fipola

Share this post