லிப்லாக்.. 18+ சீன்ஸ்.. வெளியான HolyWound ட்ரைலர்.. ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய மலையாள மொழி லெஸ்பியன் படம்

Malayalam movie holy wound trailer got in issue

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் OTT தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுவிட்டது. இதனால் OTT தளங்களுக்காகவே பிரத்யேகமாக வெப் தொடர்கள், திரைப்படங்கள் என இந்திய திரையுலகினர் தொடங்கிவிட்டனர்.

Malayalam movie holy wound trailer got in issue

மேலும், திரையரங்குகளில் வெளியிட படத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதால், சில விஷயங்கள் வெளிப்படையாக காட்டவும் OTT தளங்கள் ஏதுவாக அமைந்துள்ளது. புதுப் புது சிந்தனையாளர்கள் நினைத்தபடி படம் எடுத்து வெளியிடவும் அது உதவியாக உள்ளது.

Malayalam movie holy wound trailer got in issue

அந்த வகையில், புதிய கதைக்களத்துடன் மலையாளத்தில் தயாராகி உள்ள படம் தான் ‘ஹோலி ஊண்டு(HolyWound)’. அசோக் ஆர் நாத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அம்ரிதா வினோத், ஜானகி சுதீர் உள்ளிட்டோர் லெஸ்பியன்களாக நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி நேரடியாக OTTயில் ரிலீசாக உள்ளது.

Malayalam movie holy wound trailer got in issue

ஸ்கூல் படிக்கும்போதே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர் லெஸ்பியனாக மாறியதைப் பற்றியது தான் இப்படம். இந்த இருவரில் ஒருவர் விருப்பமின்றி ஒருவனை திருமணம் செய்துகொண்டு, கணவர் மூலம் பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களை அனுபவிக்கின்றார். மற்றொரு தோழி, கன்னியாஸ்திரியாக மாறிவிடுகிறார்.

Malayalam movie holy wound trailer got in issue

ஆணின் பாலியல் கொடுமையால் அவதிப்படும் ஒரு பெண்ணும், ஆண் துணையே இல்லாமல் வாழ்க்கையை வெறுப்புடன் வாழும் ஒரு பெண்ணும் லெஸ்பியனாக மாறுகிறார்கள். அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? அவர்களை ஏற்றுக்கொண்டதா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாம்.

Malayalam movie holy wound trailer got in issue

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் லெஸ்பியனாக நடித்துள்ள பெண்கள் இருவரும் லிப்லாக் முத்தம் கொடுக்கும்படியான காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

Malayalam movie holy wound trailer got in issue

அதுமட்டுமின்றி, அதில் ஒரு பெண்ணை கன்னியாஸ்திரியாக காட்டி உள்ளதால் இப்படத்திற்கு கிறிஸ்தவர்கள் தரப்பில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும் இந்த சர்ச்சை கதை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை காண பலரும் ஆவலாக உள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Share this post