பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் 15 நிமிட நிர்வாண காட்சி நீக்கம்.. Deleted சீன் குறித்து மிஸ்கின் வெளியிட்ட தகவல் !
இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் யூத், ஜித்தன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனர் மிஸ்கின் அவர்கள் திகில் திரைப்படங்களும், ஆழமான வலிகளையும் திரைக்கதையையும் எடுத்துரைக்கும் அளவிற்கு திரைப்படம் உருவாக்குவது அவரது வழக்கம்.
இவர் இயக்கிய ‘அஞ்சாதே’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நாயகியாக, விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். சந்தோஷ், பூர்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி செம திகில் கூட்டி வைரல் ஆகி படத்தின் ஆர்வத்தினை கூட்டியது. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்திருந்ததாக கூறப்பட்டது. முதலில் அவ்வாறு நடிக்க மறுத்ததாகவும், பின்னர் கதையின் முக்கியத்துவம் கருதியே நடிக்க சம்மதித்ததாகவும் ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இந்நிலையில், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த காட்சியை இயக்குனர் மிஷ்கின் நீக்கிவிட்டாராம். அந்த காட்சியால் இப்படத்தை குழந்தைகள் பார்க்க முடியாத சூழல் இருந்தது. இப்படம் குழந்தைகளுக்காகவும் எடுக்கப்பட்ட படம் என்பதனால் அதனை கருத்தில் கொண்டு ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சியை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.