Bad a** என நயன்தாராவை அழைத்த ஸ்ருதிஹாசன்... தீயாய் பரவும் நயன் reply.. கிளம்பிய சர்ச்சை..!
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளாக வலம் வருபவர்கள் நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நயன்தாரா. கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியான இப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ஒரு சிலர் நல்ல விமர்சனங்களை தந்து வருகின்றனர். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது.
அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்படத்தில் க்யூட் ஆக நடித்துள்ளது குறித்து நிறைய பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இத்தனை வருடங்கள் இல்லாமல் சமீபத்தில் நயன்தாரா தனக்கென தனி இன்ஸ்டா பக்கத்தை உருவாக்கி அதில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
மேலும், தன்னை புகழ்ந்து பதிவு செய்யும் பிரபலங்களின் விமர்சனங்களை ஷேர் செய்து அதற்கு பதிலளித்தும் வருகிறார். அந்த வகையில், ஜவான் திரைப்படம் குறித்தும் அதிலும் நயன்தாரா குறித்து ஸ்ருதி ஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதையும் அதற்கு நயன்தாரா அளித்த பதிலும் செம வைரல் ஆகி வருகிறது.
தனது பதிவில் அட்லீ, ஷாருக்கான், அனிருத், தீபிகா படுகோனே உள்ளிட்ட அனைவரையும் விதவிதமாக பாராட்டியுள்ள ஸ்ருதி, நயன்தாராவை “bad a**” என குறிப்பிட்டுள்ளார். இது வார்த்தை பார்க்க சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், பாசிட்டிவாக பார்த்தால் தைரியமாக செம போல்ட் ரோலில் அழகாக நடித்துள்ளதை அவர் அப்படி வர்ணித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இதனை தனது ஸ்டோரியில் ஷேர் செய்த நயன், நன்றி சொல்லும் விதமாக கை கூப்பி இருக்கும் ஸ்மைலி பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.