'லியோ' கிளைமேக்ஸ் ட்விஸ்டை பேட்டியில் உளறிய மிஷ்கின்..!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் ஆடியோ லான்ச் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘லியோ’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து மிஷ்கின் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘லியோ’ படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து விஜய் என்னை அடிக்க வேண்டும், அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
நான் விஜயிடம் அடி தம்பி ஒன்றுமில்லை என கூறினேன். அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்து தான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர் விஜய் அந்த காட்சியில் நடித்தார் என்று கூறியுள்ளார்.
‘லியோ’ குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது மிஷ்கின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிலரோ நீங்க வில்லன் ங்கிறத இப்படி உளறிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.