BiggBoss7 : உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்..!! அடேங்கப்பா சம்பவம் இருக்கு..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி (BiggBoss) கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்படவுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 6 சீசன் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட உள்ளதாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 1ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று நிகழ்ச்சியின் அறிமுகம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிகழ்ச்சியின் கன்பார்ம் ஆன போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மா கா பா ஆனந்த், ரோஷினி, ரவீனா, ரஞ்சித், மிலா, பப்லு பிரித்விராஜ், ரேகா நாயர், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் போகவுள்ளார்கள் என சொல்லப்படுகிறது.
இதுபோக, ஜாக்லின், பயில்வான் ரங்கநாதன், ஷர்மிளா, ஜோவிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் சந்தேக லிஸ்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.