பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்... இவங்க எப்ப தான் ரெஸ்ட் எடுப்பாங்களோ..!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பின்னர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 38 வயதில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
நயன்தாரா அதன் பின்னர் பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நயன்தாரா தற்போது புது நிறுவனங்களுடன் கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்.
அடுத்த மாதம் வெளியாகியுள்ள அன்னபூரணி என்ற திரைப்படம் நயன்தாராவின் 75வது படம் ஆகும். நடிகர் மாதவன் சித்தார்த் இணைந்து நடிக்கும் டெஸ்ட் என்று படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், நயன்தாரா துரை செந்தில்குமாரின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் துவங்க இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. நயன்தாராவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், பொறுமையாக படங்களை தேர்வு செய்யுமாறு இயக்குனர் அட்லியும் அறிவுரை கூறியுள்ளாராம். அதனால் நயன்தாரா கதைகளை மட்டும் கேட்டு வருகிறாராம்.