அட்லீ திருமணத்தில் நடிகை நயன் ! யார்கூட வந்தாங்க தெரியுமா.. Unseen Pic !

Nayanthara in atlee marriage along with arya viral on social media

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார்.

அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ. லயன் என்னும் டைட்டிலுடன் உருவாகி வரும் அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அட்லீயின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா ராஜா ராணியில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஆர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது தான் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara in atlee marriage along with arya viral on social media

Share this post