ஓவர் நைட்டில் இன்ஸ்டா மாடலாக மாறிய கூலித்தொழிலாளி மம்மிகா... வைரலாகும் வீடியோ..

Mammika a daily wage man stunning look as a insta model goes viral on net

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணக்காடு என்னும் பகுதியில் கொடிவள்ளியை சேர்ந்தவர் மம்மிக்கா. தனது அன்றாட தேவைக்காக கூலித்தொழில் செய்து வரும் இந்த 60 வயதான முதியவர், பொதுவாக ஒரு சாதாரண லுங்கியும் சட்டையும் அணிவது வழக்கம்.

வழக்கம்போல் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் புகைப்படக் கலைஞரான ஷரீக் இவரைப் பார்த்துள்ளார். இவரை சில புகைப்படங்கள் எடுத்து அதனை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த போட்டோக்களை வைத்து கம்பெனி ஒன்றிற்கு மாடலிங் செய்யவும் மம்மிக்காவை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷரீக்கின் கோரிக்கையை ஏற்ற மம்மிக்கா, புது ஹேர் ஸ்டைல், பேஷியல், கோட் சூட், கூலர்ஸ், ஐபேட், லேப்டாப் என இன்டர்நேஷனல் ரேஞ்சுக்கு மாடலிங் போஸ் செய்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அழுக்கு சட்டை மற்றும் லுங்கியுடனும் இருந்த அவரை ஒட்டுமொத்தமாக மாற்றிய ஷரீக் போட்டோஷூட் நடத்தியதுடன், அதனை வீடியோவாக்கி இணையத்தில் பகிரவே அது வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது, மம்மிக்காவின் அசத்தல் லுக்தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.

Share this post