'புலி சார்.. smile please..' புலி நடந்து.. உறுமி பார்த்துருப்பீங்க.. சிரிச்சு பார்த்திருக்கீங்களா.. வீடியோ பாருங்க..

Laughing tiger videos and photos getting viral on social media

காட்டின் ராஜா என சிங்கத்தைக் சொன்னாலும், நமது தேசிய விலங்கு புலிதான். வேட்டையாடுவதில் திறமை வாய்ந்த விலங்காகக் கருதப்படும் புலியை நினைத்தாலே, பாய்ந்து தனது இரையை பிடிப்பது, கம்பீரமான நடை, உறுமல் என இவை தான் நமது ஞாபகத்திற்கு வரும்.

புலி உருமினால் 3 கி.மீ தூரத்திற்கு அதன் சத்தம் கேட்கும் எனக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட புலியை சிங்கம் சூரியா டயலாக் போல தூங்கி பார்த்திருப்போம், நடந்து பார்த்திருப்போம், சாப்பிட்டு பார்த்திருப்போம் ஆனா யாரவது சிரித்து (சிரிப்பது போன்ற முகப்பாவத்தில்..) பார்த்திருக்கீர்களா..?

அப்படியான அற்புதமான தருணத்தை தனது கேமராவில் பிடித்துள்ளார் புகைப்படக் கலைஞர் ஒருவர். இந்த புலி சிரிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Laughing tiger videos and photos getting viral on social media

இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் மோனா பட்டேல் என்பவர் பகிர்ந்துள்ளார். புலி சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “புலிகள் பிறக்கும் போது பற்கள் இல்லாமல் பிறக்கும். சில வாரங்களில் பால் பற்கள் முளைக்க துவங்கி, மனிதர்கள் போலவே அந்த பல் விழுந்து, வேறு பல் முளைக்கும்.

புலிகளின் பற்களுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்க காரணம், அதன் மூலமாக தான் தனது இரையை வலுவாக பிடிக்க முடியும்” என புலியின் பல்லை பற்றி பாடமே நடத்தியுள்ளார்.

Laughing tiger videos and photos getting viral on social media

தற்போது வைரலாகி வரும் இப்புகைப்படங்களைப் பார்த்து, ‘வாவ்.. என்ன ராஜ சிரிப்பைய்யா உமது..’ என ரேஞ்சுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். வழக்கம்போல், சில குசும்பான நெட்டிசன்கள், ‘போட்டோகிராபர் புகைப்படம் எடுப்பதைத் தெரிந்து கொண்டு புலி போஸ் தருகிறது’ எனக் கலாய்த்துள்ளனர்.

Share this post