பையா படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா? பல ஆண்டுகள் கழித்து உண்மையை சொன்ன லிங்குசாமி
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, சமீபகாலமாக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
லிங்குசாமியின் கெரியரில் பையா படம் முக்கியமான ஒன்று. 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தி, தமன்னா நடித்திருந்தனர். இதில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதன் காரணமாகத் தான் அடுத்தடுத்து சிறுத்தை, தோழா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தற்போது 12 வருடங்களுக்கு பிறகு, பையா படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, முதலில் பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருந்தது தமன்னா இல்லையாம். பையா படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்.
ஆனால் சம்பள விவகாரம் காரணமாக நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்ததை அடுத்து தான் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்களாம். பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சீக்ரெட் தகவலை சமீபத்திய பேட்டியில் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.