'3 வருஷம் லவ் பண்ணோம்.. ஆனா லிவிங் டூ கெதர்..' மனம் திறந்த மஞ்சிமா மோகன்
பிரபல நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் கவுதம் கார்த்திக், கடல் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படம் செம ஹிட் ஆனது. மேலும், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது 2 படங்களில் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், தேவராட்டம் என்னும் படத்தில் மஞ்சிமா மோகன் அவர்களுடன் ஜோடியாக நடித்தார். ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும், காலத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ’தேவராட்டம்’ படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இதைதொடர்ந்து, கடந்த நவம்பர் 28ம் தேதி சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் முன்னிலையில் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் திருமணத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படங்களும் வெளியாகின.
கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரது திருமண புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் இருவரும் எடுத்துக்கொண்ட செம்ம க்யூட்டான போட்டோஸ் ட்ரெண்டிங்கில் உள்ளன. முன்னதாக கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் 3 ஆண்டுகள் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டன. தற்போது அது குறித்து மஞ்சிமா மோகன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், “கொரோனா லாக்டவுன் காலங்களில் நான் என் வீட்டில் தனியாக தான் இருந்தேன், கெளதம் கார்த்திக் அவரது அம்மாவுடன் வசித்து வந்தார். நாங்கள் இருவரும் எப்போதாவது ஒன்றாக வெளியில் செல்வதை பார்த்து மீடியாவில் தான் இப்படி தகவலை பரப்பிவிட்டார்கள். ஆனால், நாங்கள் லிவிங் டூ கெதரில் வாழ்ந்தது இல்லை” என கூறி, இந்த லிவிங் டூ கெதர் வதந்தியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.