Viral Video: பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யமா? மைனா நந்தினியின் பேச்சால் பதறிய அமுதவாணன்..

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் மைனாவிடம் அமுதவாணன் அவர்கள் திகில் கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருந்த போது உண்மையில் பேய் இருப்பதாக தனலட்சுமி நம்பியது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தார்.

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

ஆனால் சக போட்டியாளர்கள் அது பிராங்க் என கூறி தெரிவித்தார்கள். இந்நிலையில், அமுதவாணனிடம் மைனா அவர்கள் இந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் வீட்டில் ஸ்டார் எல்லாம் போட்டு எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்கிறார்கள் என்று கூறியவுடன் அமுதவாணன் அதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

myna nandhini speaks about unusual behaviours in biggboss house

இவ்வாறு வெளிவந்த தகவலின் படி இதுவும் பிராங்க்கா இல்லை உண்மையா என்பதை நாம் போகப் போக தான் தெரிந்து கொள்ள முடியும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் எப்படியோ பேய் கதைகளை சொல்லியாவது வீட்டில் இருப்பவர்களை துரத்த தான் இப்படி போட்டியாளர்கள் செய்கிறார்கள் என பலரும் கூறி வருகிறார்கள்.

Share this post