Viral Video: விக்ரமனை Body Shaming செய்த மகேஸ்வரி.. கேலியாக சிரித்த மைனா.. விக்ரமனுக்காக கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். தற்போது, விக்ரமனை தாக்கி மகேஸ்வரி, மைனா உருவக்கேலி செய்து கிண்டல் செய்ததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது 4வது வாரம் தொடங்கி இருக்கிறது.
இதில் போட்டியாளராக கலந்து வரும் விக்ரமன் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே எந்த ஒரு பிரச்சனை என்றாலும் விக்ரமன் குரல் கொடுத்து வந்திருக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகியது. அதிலும் அசீம் – விக்ரமன் இடையே இருந்த சர்ச்சை பயங்கரமாக இருந்தது. கடந்த வாரம் சிவினை இமிடெட் செய்து அசீம் நடித்துக் காட்டியிருந்ததற்கு விக்ரமன் குரல் கொடுத்து பேசியிருந்தார். பிக் பாஸும் அசிமை கண்டித்து இருந்தார்.
இந்நிலையில், விக்ரமனை கிண்டல் செய்யும் விதமாக மகேஸ்வரி, மைனா செய்திருக்கும் செயல், தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, இந்த வாரம் இந்த டிவி- அந்த டிவி என டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள். பின் எந்த அணி வெற்றி பெற்றது என்று அறிவித்திருந்தார்கள்.
அதற்கு விக்ரமன் மைனா நடத்திய நிகழ்ச்சி சரி இல்லை என்று கூறி இருந்தார். இதனால் கடுப்பாகி மைனா விக்ரமின் மீது கோபப்பட்டார். இதற்கு மகேஸ்வரியும் அவருக்கு ஆறுதலாக பேசியிருந்தார். இதனை அடுத்து மகேஸ்வரிக்கும், விக்ரமனிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மகேஸ்வரி விக்ரமனை போல் இமிடெட் செய்து காண்பித்து இருந்தார். இதை பார்த்த மைனா பயங்கரமாக கேலி செய்து சிரித்தார்.
பின் விக்ரமன், அடுத்தவங்களை இமிடெட் செய்ததற்கு தான் அசிமை கண்டித்து இருந்தார்கள் என்று சொன்னவுடனே நான் யாரையும் இமிடெட் செய்யவில்லை. எல்லோருக்கும் ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று மகேஸ்வரி வாக்குவாதம் செய்கிறார். இப்படி நந்தினியும், மகேஸ்வரியும் கூட்டணி சேர்ந்து விக்ரமனை தாக்கி பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே விக்ரமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நந்தினி- மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
#BiggBossTamil #BiggBossTamil6
— Raju (@partlysanee) November 1, 2022
Whole anbu gang is cornering and disrespecting #Vikraman
Mahe, Myna and Mani abnoxioua to the core 👎 pic.twitter.com/cNrlsj5S7q
#Myna proving you are a Vijay TV product by laughing for such cheap antics from #Maheshwari. #BiggBossTamil6 pic.twitter.com/VKsPJcdXEY
— Singoolarity (@singoolarity) November 2, 2022
#VJMaheswari பூமர் Body Shaming பண்ணலனா #Myna
— Bhimjith (@Bhimjith1) November 2, 2022
பூமர் ஏன் நக்கலா சிரிக்கணும்????#Vikraman.#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/ZuiApn70Ab