ஹாப்பி நியூஸ் சொன்ன முல்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸ்'ல் அனைவரும் எதிர்பார்த்த முக்கிய திருப்பம் !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.
அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது. இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது. இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
தற்போது, தொடரில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏங்கி கொண்டிருந்த முல்லை கர்ப்பமாகிவிட்டார் என சொல்லப்படுகிறது. கதிர் - முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார். அதற்காக மருத்தவ ரீதியான சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது முல்லை கர்ப்பமாகிவிட்டார் எனும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.