'லவ் டுடே' படத்தின் இந்தி ரீ-மேக்.. ஹீரோ - ஹீரோயின் யார் தெரியுமா ? அட பாவிங்களா..இதையும் விட்டு வைக்கலையா?
கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியிருந்தார் பிரதீப்.
இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படி ஒரு நிலையில், இப்படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லவ் டுடே படத்தின் பாலிவுட் ரீமேக்கில் வருண் தவான் நடிக்க இருக்கிறாராம்.
இதை கேட்ட தமிழ் ரசிகர்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழில் வெளியான ராட்சசன், காஞ்சனா, ஜிகிர்தண்டா, சிங்கம் என்று பல படங்களை ரீ மேக் என்ற பெயரில் இந்தியில் கொடுமை செய்து வைத்திருந்தனர் என சொல்லி வருகின்றனர்.