'வாரிசு' குறித்து முக்கிய ட்விஸ்ட்டை Live'ல் உளறி கொட்டிய ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இப்படம் ஜனவரி 12ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே வெளியாக இருப்பதாக ராஷ்மிகா லைவ் வீடியோவில் தெரிவித்துள்ளார். 2022 டிசம்பர் 31ம் தேதி இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் கேட்ட கேள்விக்கு வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.