அடையாளம் தெரியாமல் மெலிந்து போன பிரபல நடிகர்.. கண்கலங்கி கட்டியணைத்த மோகன்லால் !

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் மோகன்லால். மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

இவர் சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகரை, கட்டி பிடித்து முத்தம் கொடுத்து தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டி நெகிழ வைத்த செயல், திரையுலகினரையும், ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

மலையாள திரையுலகில் 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும் கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டவர். இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாகவும் , நடிகர்களாகவும் உள்ளனர்.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

சமீபகாலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் சீனிவாசன், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபத்தில், திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமாகி வீடு திரும்பினார். இருந்தாலும் அவரது உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியது, இவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

இந்நிலையில், மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் அவர்களை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர்.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

அவரது மெலிந்த தோற்றத்தை பார்த்து கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Mohanlal hugs actor seenivasan on stage on looking his condition

Share this post