அது வேற வாய்.. இது நாற வாய்.. மீசையை எடுக்க முடியாது.. ஜகா வாங்கிய மீசை ராஜேந்திரன்..!

meesai-rajendran-afraid-and-says-never-shave-his-moustache

லியோ ஜெயிலர் வசூலை மிஞ்சினால் மீசையை எடுத்து விடுவேன் என ரஜினி ரசிகரும், நடிகருமான நடிகர் ராஜேந்திரன் சவால் விடுத்து இருந்தார். லியோவின் முதல் நாள் வசூலை பார்த்து மீசையை எடுக்க முடியாது என்று தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.

meesai-rajendran-afraid-and-says-never-shave-his-moustache

இதனிடையே, யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மீசை ராஜேந்திரன், “என்னுடைய மீசையை பற்றி கேட்பீர்கள், ஆனால் நான் எடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஜெயிலர், 2.0 படங்களின் வசூலை லியோ படம் நிச்சயம் முறியடிக்காது என்று கூறியுள்ளார். முதலில் ஜெயிலர் படத்தை மட்டும் கூறி வந்த அவர் தற்போது 2.0 படத்தையும் உடன் சேர்த்துள்ளார்.

meesai-rajendran-afraid-and-says-never-shave-his-moustache

லியோ படத்தின் வசூல் அதிகம் என்கிறீர்களா என்ற கேள்விக்கு, என் படம் 800 கோடி வசூலைத் தாண்டியது என்று விஜய் சார் சொல்லட்டும், அப்போது மீசையை எடுக்கிறேன் என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஜெயிலரின் 525 கோடி வசூலை தாண்டட்டும், அதுவரை மீசையை எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு 2.0 படம் 800 கோடி வசூலை நோக்கி சென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

meesai-rajendran-afraid-and-says-never-shave-his-moustache

மேலும், லியோ திரைப்படம் குப்பை படம், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகாது. அதை பார்த்துட்டு ஐசியூவுக்கு போகிற நிலைக்கு ஆளாகி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this post