'இது மட்டும் நடந்திருந்தா என் கணவர காப்பாத்திருக்கலாம்' நடிகை மீனாவின் திடீர் பதிவு !

meena shares post about sagar death and organ transplantation

1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா.

meena shares post about sagar death and organ transplantation

அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

meena shares post about sagar death and organ transplantation

தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

meena shares post about sagar death and organ transplantation

இதனை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.

meena shares post about sagar death and organ transplantation

28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

meena shares post about sagar death and organ transplantation

இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி அவர் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ரம்பா, ஸ்னேஹா, இயக்குனர் ரவி குமார், சுந்தர் சி, மன்சூர் அலிகான், கலா மாஸ்டர், நடிகை லட்சுமி, இயக்குனர் சேரன், நடிகை ரம்பா என பலரும் மீனா வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

meena shares post about sagar death and organ transplantation

இதனிடையே, மீனா தனது கணவரின் மறைவு குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். மீனா விரைவில் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

meena shares post about sagar death and organ transplantation

கணவர் வித்யாசாகர் உயிர் இழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை, அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் சந்தித்துள்ளனர்.

meena shares post about sagar death and organ transplantation

ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து, மீனாவை சந்தித்த புகைப்படங்களை, அவரே வெளியிட்டுள்ளார். கணவர் இறந்த பின்னர் முதல் முறையாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, அவரை சந்திப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட் மூலம் தெரிவித்து வந்தனர்.

meena shares post about sagar death and organ transplantation

இதை தொடர்ந்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், நடிகை மீனா நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா வைத்த பிரம்மாண்ட பார்ட்டியில் கலந்து கொண்டார். தற்போது நடிகை மீனாவை, அவரது நெருங்கிய தோழிகளான கலா மாஸ்டர் மற்றும் ரம்பா ஆகியோர் கடற்கரைக்கு அழைத்து சென்றனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

meena shares post about sagar death and organ transplantation

இந்நிலையில், நடிகை மீனா உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “ஒரு உயிரை காப்பாற்றுவதை விட சிறந்த விஷயம் வேறு எதுவும் கிடையாது. அப்படி உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு சிறந்த விஷயம் தான் உடல் உறுப்பு தானம்.

meena shares post about sagar death and organ transplantation

அரியவகை நோயால் அவதிப்படும் பலருக்கு அதன்மூலம் மறுவாழ்வு கொடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். எனது கணவர் சாகருக்கும் உடலுறுப்பு தானமாக கிடைத்திருந்தால், என்னுடைய வாழ்க்கையும் மாறி இருக்கும். ஒருவர் உடலுறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்.

meena shares post about sagar death and organ transplantation

அனைவரும் உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது தானம் செய்பவர்களுக்கும், அதன்மூலம் பயனடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் அல்ல. இது சம்பந்தபட்டவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளேன். நம்முடைய புகழ் நிலைத்து நிற்க இதுவே சிறந்த வழி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் மீனா. அவரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் செயலிழந்ததை அடுத்து, அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்க மீனா பெரிதும் முயன்றார். ஆனால் அது கிடைக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post