குச்சி ஐஸ் சாப்பிட்டு கூலாக என்ட்ரி கொடுக்கும் கார்த்தி.. விருமன் படம் Review இதோ !

Viruman review getting viral on social media

குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Viruman review getting viral on social media

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Viruman review getting viral on social media

விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Viruman review getting viral on social media

இப்படம் இன்று ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகியுள்ளது. விருமன் படம் எப்படி இருக்கு என மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள விமர்சனங்களையும் கருத்துக்களையும் இங்கே பார்ப்போம்.

Viruman review getting viral on social media

இந்த படத்தில் விருமனின் தாத்தாவாக ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளனர். அறிமுக நாயகி அதிதி ஷங்கர் எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்து உள்ளது. கார்த்தியின் கதாபாத்திரம் செம ஜாலியான காட்டுமிராண்டி, ஓப்பனிங் காட்சியிலேயே குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கிட்டு திருவிழா கூட்டத்தில் ரவுடிகளுடன் சண்டை போடுவது போல அமைந்துள்ளது.

Viruman review getting viral on social media

475 திரையரங்குகளில் வெளியாகி உள்ள கார்த்தியின் விருமன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ரொம்ப நல்லா உள்ளதாகவும், முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், இப்படம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Viruman review getting viral on social media

தென்னாட்ட ஆண்டதெல்லாம் எங்க தமிழ் இனம்டா.. பயமே அறியாத பரம்பரைடா.. பழச மறக்காத தலைமுறைடா.. என விருமன் பாடல் வரிகளை பதிவிட்டு ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். டைட்டில் கார்டிலேயே யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் தெறிக்கவிடுவதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Viruman review getting viral on social media

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த படத்தில் மிகவும் அழகாக படமாக்கி உள்ளார். கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் நடிப்பு அட்டகாசம் என்றும், தியேட்டரில் விருமன் படத்தின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது என்றும், படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், பலர் விருமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share this post