வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடி ஏற்றிய நடிகர் சூரி ? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !
தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான், விருமன் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தற்போது சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியானது.
அந்த வகையில், நடிகர் சூரி அவரது அபார்ட்மெண்டில் தற்போது தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் புகைப்படத்தை சூரி வெளியிட்டு இருக்கும் நிலையில் அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். வீடு துடைக்கும் மாப் குச்சியில் அவர் தேசிய கொடி ஏற்றி இருப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.