விஜய்க்கு மகனாக நடித்ததற்கு மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், கவுதம் மேனன், சாண்டி, மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து ரிலீஸ் ஆன ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. இப்படம் 16 நாளில் ரூ.553 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விஜய் உட்பட படத்தில் பணியாற்றிய பல நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பங்கேற்றனர்.
லியோ படத்தில் விஜய்யின் மகனாக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்தருந்தனர் . இவர் நடிப்பில் மலையத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் ரூ. 30 முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.